பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக படிக்கல், பின்ச் இருவரும் களமிறங்கினர்.
அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசி படிக்கல் 54 , பின்ச் 52 ரன்னில் வெளியேறினர். பின்னர், இறங்கிய கோலி 3 ரன்னில் விக்கெட்டை இழக்க இதைத் தொடர்ந்து, இறங்கிய வில்லியர்ஸ் 55 ரன்கள் எடுக்க இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் எடுத்தனர்.
பின்னர், இறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, குயின்டன் இருவரும் இறங்கினர். வந்த வேகத்தில் ரோஹித் 8 ரன்னில் வெளியேற , பின்னர் சூர்யகுமார் யாதவ் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழக்க இவரை தொடர்ந்து குயின்டன் 14 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அணி மோசமான நிலையில் இருக்க மத்தியில் இறங்கிய இஷான் கிஷன், பொல்லார்ட் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 99 ரன்கள் குவித்தார். பொல்லார்ட் 60 ரன்கள் எடுத்தார்.
இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5விக்கெட்டை இழந்து 201 ரன்கள் எடுத்தனர். இதனால், போட்டி சமனில் முடிந்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஒவரில் முதலில் இறங்கிய மும்பை அணி 1 விக்கெட்டை இழந்து 7 ரன்கள் எடுத்தனர்.
பின்னர், இறங்கிய பெங்களூரு அணி 11 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…