இன்றைய 28-வது போட்டியில் பெங்களூர் Vs கொல்கத்தா அணிகள் மோதியது. இப்போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக படிக்கல், ஆரோன் பிஞ்ச் இருவரும் இறங்கினர். நிதானமாக விளையாடி வந்த படிக்கல் 33 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்த சில ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த ஆரோன் பிஞ்ச் அரைசதம் அடிக்கமால் 47 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர், கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் இருவரும் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், கோலி 33* மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் 73* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 194 ரன்கள் எடுத்தனர்.
195 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக டாம் பான்டன், சுப்மான் கில் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே டாம் பான்டன் 8 ரன் எடுத்து வெளியேற, பின்னர் இறங்கிய ராணா வந்த வேகத்தில் 9 ரன்னுடன் நடையை காட்டினார். இதைத்தொடர்ந்து, நிதானமாக விளையாடிய சுப்மான் கில் 33 ரன்னில் விக்கெட்டை இழக்க பின்னர், களம் கண்ட வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்முடிவில் 9 விக்கெட்டை இழந்து 112 ரன்கள் எடுத்து 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றதால் 10 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு சென்றுள்ளது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
சென்னை : கோடை காலத்தில் கொளுத்தும் வெயியிலின் தாக்கத்தின் காரணமாக உடல் சூட்டை தணிக்க பொதுமக்கள் தர்பூசணி பழத்தை விரும்பி…