அடுத்தாண்டு ஐபிஎல் 15-வது சீசனில் மொத்தம் பத்து அணிகள் விளையாட உள்ளன. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக இணைந்துள்ளன. அடுத்த சீசனில் அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும்.
அதன்படி, 8 அணிகளும் அதிகபட்சமாக 2 இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள், 1 வெளிநாட்டு வீரர் என தக்கவைக்கலாம். முதல் வீரருக்கு ரூ.16 கோடி, 2-வது வீரருக்கு ரூ.12 கோடி, 3வது வீரருக்கு ரூ.8 கோடி, 4வது வீரருக்கு ரூ.6 கோடி ஊதியம் வழங்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்தது.
இந்நிலையில், தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட இன்று கடைசி நாள் என்பதால் அனைத்து அணிகளும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி,
ஆர்சிபி அணி : விராட் கோலி -15 கோடி , க்ளென் மேக்ஸ்வெல் -11 கோடி, முகமது சிராஜ் -7 கோடிக்கு தக்க வைத்துள்ளது. ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்திற்கு அந்த அணியிடம் ரூ.57 கோடி மீதம் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா -16 கோடி, பும்ரா- 12 கோடி, சூர்யகுமார் யாதவ் -8 கோடி , பொல்லார்டு -6 கோடிக்கு தக்க வைத்துள்ளது. ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்திற்கு அந்த அணியிடம் ரூ.48 கோடி மீதம் உள்ளது.
பஞ்சாப் அணி: மயங்க் அகர்வால் – 14 கோடி, அர்ஷ்தீப் சிங் – 4 கோடிக்கு தக்க வைத்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: கேன் வில்லியம்சன்-14 கோடி, அப்துல் சமாத் -4 கோடி, உம்ரான் மாலிக் -4 கோடிக்கு தக்க வைத்துள்ளது.
சிஎஸ்கே – தோனி-12 கோடி, ஜடேஜா -16 கோடி, ருதுராஜ் கெய்க்வாட்- 6 கோடி, மொயின் அலி -8 கோடிக்கு தக்க வைத்துள்ளது.
கேகேஆர் – ஆண்ட்ரே ரசல் -16 கோடி, வருண் சக்கரவர்த்தி- 8 கோடி, வெங்கடேஷ் ஐயர்- 8 கோடி , சுனில் நரைன் -6 கோடிக்கு தக்க வைத்துள்ளது.
டெல்லி – ரிஷப் பண்ட்- 16 கோடி, அக்ஸர் படேல்-9 கோடி, பிரித்வி ஷா – 7.50 கோடி, அன்ரிக் நோர்க்யா – 6.50 கோடிக்கு தக்க வைத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் – சஞ்சு சாம்சன்- 14 கோடி, ஜோஸ் பட்லர்- 10 கோடி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 4 கோடிக்கு தக்க வைத்துள்ளது.
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…