IPL Breaking:பெங்களூர் அணி ஆக்ரோஷம் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று லக்னோவை வீழ்த்தியது

Royal Challengers Bangalore

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் யை வீழ்த்தியது.

16-வது ஐபிஎல் தொடரின்  43  வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் க்கு இடையேயான போட்டி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி மற்றும் டு பிளெசிஸ் அதிரடியாக விளையாடாமல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

கோலி 31 ரன்களுடனும் மற்றும்  டு பிளெசிஸ் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.அதன் பின்னர் வந்த அனுஜ் ராவத்(9),க்ளென் மேக்ஸ்வெல்(4),சுயாஷ் பிரபுதேசாய்(6) ஆகியோர் ஒற்றை இழக்க ரன்களில் அட்டமிழந்தனர்.

இதன் பின்னர் 15 ஓவரில் மழை குறுக்கிட ஆட்டம் சற்று ஒத்திவைக்கப்பட்டது.மீண்டும் தொடர்ந்த நிலையில் பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் :

இதனைத்தொடர்ந்து  சுலபமான என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி ஆரம்பம் முதலே தடுமாறத் தொடங்கியது.தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கைல் மேயர்ஸ் டக் அவுட் ஆக ஆயுஷ் படோனி( 4) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

க்ருணால் பாண்டியா(14),க்ருணால் பாண்டியா(1),மார்கஸ் ஸ்டோனிஸ்(13) என அடுத்தடுத்து ஆட்டமிழக்க கிருஷ்ணப்பா கவுதம் மட்டும் அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்தார்.

திரில் வெற்றி:

அதன் பின்பு வந்த அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 10 விக்கெட்களையும் இழந்தது லக்னோ தோல்வியை தழுவியது.பெங்களூரு அணி  18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பெங்களூரு அணியில் கர்ண் சர்மா மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் தலா  2 விக்கெட்களை எடுத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்