பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் எடுத்தனர்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், ஹைதராபாத் அணியும் சென்னை சேப்பாக்க மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கோலி, படிக்கல் இருவரும் இறங்கினர். வந்த சிறிது நேரத்திலேயே படிக்கல் 11 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இறங்கிய ஷாபிஸ் அகமது 14 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல், விராட் கோலி உடன் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர்.
நிதானமாக விளையாடி வந்த கோலி 33 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார். நிதானமாக விளையாடி வந்த மேக்ஸ்வெல் அரைசதம் அடித்து 59 ரன் எடுத்தார்.
மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் எடுத்தனர். ஹைதராபாத் அணி 150 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…