சொந்த மண்ணில் வீழ்ந்த பெங்களூர்! தோல்விக்கான காரணங்கள் என்ன ?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 8 விக்கெட் வித்தியாயசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றது.

பெங்களூரு : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய பெங்களூரு அணி 7 ஓவருக்குள் 4 விக்கெட் இழந்து தடுமாறியது.
RCB-ல் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 54 ரன்கள் எடுத்தார். ஜிதேஷ் சர்மா 33 ரன்களும், டிம் டேவிட் 32 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 169 ரன்கள் எடுத்து. 20 ஓவரில் 170 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் சிறப்பாக விளையாடியது. 17.5 ஓவரிலேயே 170 டார்கெட்டை அடித்து பெங்களூரு அணியை அதன் சொந்த மைதானத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த போட்டியில் பெங்களூர் அணி தோல்வி அடைந்ததற்கு சிலமுக்கிய கரணங்கள் இருக்கிறது அந்த காரணங்கள் குறித்து பார்ப்போம்.
பேட்டிங் சொதப்பல் : பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. லியாம் லிவிங்ஸ்டன் 54 ரன்கள் எடுத்து அதிகபட்ச ஸ்கோரராக இருந்தாலும், மற்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் போதிய பங்களிப்பை வழங்கவில்லை. சின்னசாமி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது என்றாலும், பெங்களூர் அணியால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை. எனவே, இதுவும் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம்.
பந்துவீச்சில் தாக்கம் இல்லை : குஜராத் அணி 170 ரன்கள் என்ற இலக்கை 17.5 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து எட்டியது. ஜோஸ் பட்லரின் 73* ரன்கள் (39 பந்துகளில்) அதிரடியாக விளையாடினார். சீக்கிரமே போட்டியை முடிக்கும் அளவுக்கு அதிரடியாக அவர்கள் விளையாட அவர்களை கட்டுப்படுத்தும் அளவுக்கு பெங்களூரில் சிறப்பான பந்துவீச்சை இல்லை.
மைதானத்தை சரியாக பயன்படுத்தவில்லை : சின்னசாமி மைதானம் பொதுவாக அதிக ரன்கள் குவிக்க மிகவும் சிறந்த மைதானம். பெங்களூர் பல போட்டிகள் இந்த மைதானத்தில் விளையாடி இருக்கும். அப்படி இருந்தும் கூட பெங்களூர் அணி இந்த சாதகத்தை முழுமையாக பயன்படுத்தவில்லை. 169 ரன்கள் இலக்கு இந்த மைதானத்தில் சின்ன ஸ்கோர் என்பதால் குஜராத் அணி எளிதாக இலக்கை எட்டியது. இது தான் தோல்விக்கு முக்கிய காரணங்களாகவும் பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025