#RCBvSRH பெங்களூரு – ஹைதராபாத் அணிகள் மோதல்! வெற்றிக்கனியை பறிக்கப் போவது யார்…?

இன்று ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரில் 13 ஆவது சீசன், தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று பிளே-ஆப்ஸ் முதல் சுற்று நடைபெற்றது. அதைபோல் இன்று பிளே-ஆப்ஸ் 2 வது சுற்றில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளது. இதில் தோல்வியடையும் அணி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறி விடும். மேலும் வெற்றி பெறும் அணி, பிளே-ஆப்ஸ்-1 சுற்றில் தோல்வியடைந்த டெல்லி அணியுடன் மோதும்.
மேலும் பெங்களூரு அணி இறுதியாக ஆடிய 4 லீக் போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால், இந்த போட்டியில் கட்டாயமாக வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி வலுவான நிலையில், உள்ளதால் பெங்களூரு இந்த அணியை சமாளிப்பது சற்று கடினம் தான்.
இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 17 போட்டிகள் மோதியதில் 7 முறை பெங்களூர் அணியும், 9 முறை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி சமநிலையில் முடிந்துள்ளது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஹைதராபாத் அணி வீரர்கள்
டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, மணீஷ் பாண்டே, முகமது நபி, பிரியம் கர்க், ரித்திமான் சார்கா, பாஷிக் தம்பி, அபிஷேக் ஷர்மா, சந்தீப் சர்மா, ஷாபாஸ் நதீம், கலீல் அகமது, டி.நடராஜன், மிச்சேல் மார்ஸ், ரிஷீத் கான், சித்தார்த் கெய்ல்.
பெங்களூரு அணி வீரர்கள்
விராட் கோலி, டி வில்லியர்ஸ், ஆரோன் ஃபின்ச், ஜோஷ் பிலிப், கிறிஸ் மோரிஸ், மொயின் அலி, முகமது சிராஜ், ஷாபாஸ் அகமது, தேவ்தத் படிக்கல், யுவேந்திர சஹால், நவ்தீப் சைனி, டேல் ஸ்டெயின், உசுரு உதானா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025