என்னங்க வீட்லயே அடிக்கிறீங்க..? சொந்த மைதானத்தில் மோசமான சாதனை படைத்த பெங்களூர்!
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை சொந்த மைதானத்தில் அதிக போட்டிகள் தோல்வியை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை பெங்களூர் அணி படைத்திருக்கிறது.

பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம் திணறி வருகிறது என்று சொல்லலாம். இதுவரை இந்த சீசனில் 7 போட்டிகள் விளையாடி இருக்கும் நிலையில், 4 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி விவரபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் பெங்களூர் தோல்வி அடைந்த போட்டிகள் அனைத்தும் அவர்களுடைய சொந்த மைதானமான பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் தான்.
வெளிய புலி என்பது போல போட்டிகளை வென்று வரும் பெங்களூர் அணி சொந்த மைத்தனத்திலே சொதப்பி வருவது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக இருந்து வருகிறது. இந்த சீசனில் 3 போட்டிகள் சொந்த மைதானத்தில் தோல்வி அடைந்ததன் மூலம் மோசமான சாதனை ஒன்றையும் பெங்களூர் அணி படைத்திருக்கிறது. அது என்ன சாதனை என்றால் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி தங்களுடைய சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வியை கண்ட அணி என்ற சாதனை தான்.
தங்களது ஹோம் கிரவுண்டில் இதுவரை பெங்களூர் அணி மொத்தமாக 46 போட்டிகளில் தோல்வியை சந்தித்து இந்த மோசமான சாதனையை படைத்திருக்கிறது. அதைப்போல டெல்லியில் டெல்லி அணி இதுவரை – 45 போட்டிகள், கொல்கத்தாவில் கொல்கத்தா – 38 போட்டியில் மும்பையில் மும்பை அணி – 34 போட்டிகள் தோல்வியை சந்தித்தது இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.
நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய போட்டிக்கு முன்பு வரை பெங்களூர் அணி 45 என டெல்லிக்கு இணையாக தான் இந்த மோசமான சாதனை பட்டியலில் இருந்தது. ஆனால், அந்த போட்டியில் படுதோல்வியை சந்தித்ததன் மூலம் இந்த மோசமான சாதனையையும் பெங்களூர் அணி படைத்தது. தொடர்ச்சியாக சொந்த மைதானத்தில் சொதப்பி வருவதை பார்த்த ரசிகர்கள் சிம்பு பேசிய வசனமான என்னங்க வீட்லயே அடிக்கிறீங்க..? என நகைச்சுவையாக பேசி வருகிறார்கள்.