IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் சென்னை அணியும், பெங்களூர் அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதியது. இப்போோட்டில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 218 ரன்கள் எடுத்தனர்.
இதில் அதிகபட்சமாக கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 54 ரன்களும், விராட் கோலி 47 ரன்களும், ரஜத் படிதார் 41 ரன்களும், கேமரூன் கிரீன் 38* ரன் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். சென்னை அணியில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டையும், மிட்செல் சான்ட்னர், துஷார் தேஷ்பாண்டே தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
219 ரன்கள் இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா இருவரும் களம் இறங்கினார். முதல் பந்திலே ருதுராஜ் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து டேரில் மிட்செல் களமிறங்க அவர் வந்த வேகத்தில் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து நடையை கட்டினார். இதனால் சென்னை அணி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டை பறி கொடுத்தது.
பின்னர் ரஹானே, ரச்சின் ரவீந்திரா இருவரும் கூட்டணி அமைத்து சரிவில் இருந்த அணியை மீட்டுக் கொண்டு வந்தனர். நிதானமாக விளையாடி வந்த ரஹானே 33 ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தார். இவர்கள் இருவரின் கூட்டணியில் கிட்டத்தட்ட 66 ரன்கள் எடுக்கப்பட்டது.
அடுத்து சிவம் துபே களமிறங்க நிதானமாக சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா அரைசதம் அடித்து 61 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆகிய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இருப்பின் அடுத்த சில நிமிடங்களில் சிவம் துபே 7 ரன்னிலும், மிட்செல் சான்ட்னர் 3 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
அடுத்து ஜடேஜா, தோனி இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். இருப்பினும் டோனி 25 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இறுதியாக சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக 4-வது அணியாக பெங்களூர் பிளே ஆப் சென்றது. கடைசிவரை களத்தில் ஜடேஜா 42* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…