அஸ்வினின் எச்சரிக்கை….ரிக்கி பாண்டிங் ரியாக்சன்-வைரலாகும் வீடியோ!
பெங்களூரு வீரர் ஆரோன் ஃபின்ஞ்சை மான்கட் முறையில் அவுட் செய்யாமல் எச்சரிக்கை செய்தபோது ரிக்கி பாண்டிங் கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது
கடந்த ஐ.பி.எல் தொடரில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஜோஸ் பட்லரை மான்கட் முறையில் அவுட் செய்தார். ஆனால் அஸ்வினின் இச்செயலுக்கு கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் பறந்தது. இது நேர்மையான செயல் முறையல்ல என்றும் இவ்வாறு ஒரு வீரரை அவுட் செய்வது ஆட்டத்தின் மீதான ஈடுபாட்டைக் குறைக்கும் போன்ற கடுமையான விமர்சனங்கள் அப்போது எழுந்தது. ஆனால் அஸ்வின் நான் ஆட்ட விதிமுறைகளின் கீழ்தான் விளையாடினேன் என்று தனது செயலை நியாப் படுத்தினர்.
இந்தநிலையில் நேற்றையப் போட்டில் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை அஸ்வீன் வீசும்போது நான்ஸ்டைரைக்கில் நின்ற ஆரோன் ஃபின்ஞ்ச் கிரிஸ் லைனை விட்டு சற்று வெளியே சென்றிருந்தார்.அப்போது, அஸ்வின் அவரை அவுட் செய்யாமல் எச்சரிக்கை கொடுத்தார். இந்த நிகழ்வை டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்.
அவருடைய ரியாக்சன் இணையத்தில் வைரலாகிவருகிறது. அவர் சிரித்தற்கு காரணம் இதற்கு முன், அஸ்வினுடனான ஒரு உரையாடலின்போது, ‘மான்கட் முறையில் விக்கெட் எடுப்பது விதிமுறைகளில் இருந்தாலும் அது சரியான வழிமுறையில் பேட்ஸ்மேனை விக்கெட் எடுக்கும்முறையல்ல’ என்று கூறியுறுந்தார்.இதனைப் பின்பற்றிய அஸ்வின், ஃபின்ஞ்சை ஆட்வுட்டாக்கி விக்கெட் எடுக்காமல் எச்சரிக்கை செய்தற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Let’s make it clear !! First and final warning for 2020. I am making it official and don’t blame me later on. @RickyPonting #runout #nonstriker @AaronFinch5 and I are good buddies btw.???????? #IPL2020
— Ashwin ???????? (@ashwinravi99) October 5, 2020
அஸ்வின் இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் நான், இதனை தெளிவுபடுத்துக்கொள்கிறேன் என்று
பபதவிட்டுள்ளார்.ஆனால் அஸ்வினின் எச்சரிக்கை மற்றும் ரிக்கி பாண்டிங்கின் ரியாக்ஸனை ரசிகர்கள் ரசித்து
அதனை சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்படுவதால் இது வைரலாகி உள்ளது.