பஞ்சாபை வீழ்த்தி 3-வதாக அணியாக பிளே ஆப் சென்ற பெங்களூர் ..!
பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஐபிஎல் தொடரின் 48-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இப்போட்டியானது, ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக கோலி, படிக்கல் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய கோலி 25, படிக்கல் 40 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் இறங்கிய மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி ஏபி டிவில்லியர்ஸ் 23, மேக்ஸ்வெல் 57 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தனர். இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியில் ஷமி, மோயிஸ் ஹென்ரிக்ஸ் தலா 3 விக்கெட்டை பறித்தனர். 165 ரன்கள் என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் கே.எல் ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர்.
நிதானமாக வந்த கே.எல் ராகுல் 39 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய நிக்கலஸ் பூரன் வழக்கம் போல சிறப்பாக விளையாடாமல் 3 ரன் விக்கெட்டை பறிகொடுத்தார். அதிரடியாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் அரைசதம் விளாசி 57 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஐடன் மார்க்ரம் 20 ரன் எடுக்க பின்னர் களம் கண்ட சர்பராஸ் கான் டக் அவுட்டானார்.
இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால், பெங்களூர் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 16 புள்ளிகள் எடுத்து 3-வதாக அணியாக பிளே ஆப் பெங்களூர் சென்றது. இதற்கு முன் சென்னை அணி 18புள்ளி உடன் முதல் அணியாக பிளே ஆப் சென்றது.
இதைத் தொடர்ந்து ,டெல்லி அணி 18 புள்ளிகள் பெற்று இரண்டாவது அணியாக சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.