IPL2024: டெல்லியை வீழ்த்தி பெங்களூர் 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி..!

Published by
murugan

IPL2024: டெல்லி அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய ஐபிஎல் போட்டியின் இரண்டாவது போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 187 ரன்கள் எடுத்தனர்.

இதில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 52 ரன்களும், வில் ஜாக்ஸ் 41 ரன்களும், கேமரூன் கிரீன் 32 ரன்களும் எடுத்தனர். அதே நேரத்தில் டெல்லி அணியில் கலீல் அகமது, ரசிக் சலாம் தலா 2 விக்கெட்டையும்,  முகேஷ் குமார், குல்தீப் யாதவ்,
இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டையும் பறித்தனர். 188 ரன்கள்இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக  டேவிட் வார்னர், ஜேக் ஃப்ரேசர் இருவரும் களமிறங்கினர்.

இதில் முதல் ஓவரின் நாலாவது பந்தில் தொடக்க வீரர்  டேவிட் வர்ணர் ஒரு ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.  அடுத்து வந்த அபிஷேக் போரல் மூன்றாவது ஓவரில் 2 ரன்கள் எடுத்து விக்கெட் பறி கொடுத்தார். நிதானமாக சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் ஜேக் ஃப்ரேசர் 8 பந்தில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி என மொத்தம் 21 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.

இதனால் டெல்லி அணி 3 ஓவரில் மூன்று விக்கெட்டை இழந்து 24 ரன்கள் எடுத்திருந்தனர். பின்னர் களமிறங்கிய குமார் குஷாக்ரா வந்த வேகத்தில் 2 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். பிறகு அக்சர் படேல், ஷாய் ஹோப் இருவரும் கூட்டணி அமைத்து சரிவில் இருந்த அணியை மீட்டுக் கொண்டு வந்தனர்.

இருப்பினும் சிறப்பாக விளையாடிய ஷாய் ஹோப் சிக்ஸர் அடிக்கும் முயன்ற போது கரண் சர்மாவிடம் விக்கெட்டை கொடுத்து 29 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 3 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறி கொடுத்தார். அடுத்தடுத்து விக்கெட்டை டெல்லி பறிகொடுத்தாலும் கேப்டன் அக்சர் படேல் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து நிலைத்து நிற்காமல் 57 ரன் எடுத்து நடையை காட்டினார்.

டெல்லி அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் யாஷ் தயாள் 3 விக்கெட்டையும், லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டையும், கேமரூன் கிரீன், ஸ்வப்னில் சிங், முகமது சிராஜ் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மொத்தமாக 13 போட்டிகளில் விளையாடி தலா 6 போட்டியில் வெற்றியும், தலா 7 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளன.

 

Published by
murugan

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 mins ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

32 mins ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

44 mins ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

48 mins ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

1 hour ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

2 hours ago