BAN vs SL: டாஸ் வென்ற பங்களாதேஷ் பந்துவீச்சு தேர்வு.!

BANvSL toss

BAN vs SL: 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடரில் இதுவரை இந்தியா மாற்று தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகள் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றிருக்கும் நிலையில், இன்று நடைபெறும் 38வது லீக் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாத பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகள் மோதுகிறது.

இந்த போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் இலங்கை அணி 7 போட்டிகளில் 2 போட்டியில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. வங்கதேச அணி 7 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.

இதனால் ஐசிசி உலகக் கோப்பை 2023 இல் இந்த இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்புகள் இல்லை. தற்போதைய போட்டியானது அவர்களுக்கான வாய்ப்புகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றாலும், தாங்கள் சிறந்தவர்கள் என்பதைக் காட்ட இரு அணிகளும் கடுமையாக விளையாடுவார்கள்.

இவ்விரு அணிகளும் இதுவரை 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் 42 போட்டிகளில் இலங்கையும், 9 போட்டியில் பங்களாதேஷ் அணியும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு போட்டிகள் எந்த முடிவும் இல்லாமல் முடிந்துள்ளது. தற்பொழுது இன்றையப் போட்டி தொடங்கியுள்ள நிலையில், டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது.

இலங்கை

பாத்தும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ்(W/C), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, மகேஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீர, கசுன் ராஜித, தில்ஷான் மதுஷங்க

பங்களாதேஷ்

தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, முஷ்பிகுர் ரஹீம்(W), மஹ்முதுல்லா, ஷாகிப் அல் ஹசன்(C), தவ்ஹித் ஹிரிடோய், மெஹிதி ஹசன் மிராஸ், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்