பாக்..,கேப்டன் பிஸ்மா தனது மகளுக்கு தொட்டில் கட்டிக் கொண்டாட்டம்..!

இன்று நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணி மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மெக் லானிங் பந்துவீச முடிவு செய்தார். முதலில் இறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பிஸ்மா மரூப் (78 நாட் அவுட்) மற்றும் ஆல்-ரவுண்டர் அலியா ரியாஸ் (53) தவிர எந்த பேட்ஸ்மேனும் சிறப்பாக விளையாடவில்லை. பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. . ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 34.4 ஓவரில் 193 எடுத்து 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆஸ்திரேலியா அணி சார்பில் நட்சத்திர விக்கெட் கீப்பர் ஹீலி (72) ரன் அடித்தார். முதல் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு வந்துள்ளது.
பாகிஸ்தான் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது. முதல் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில், இப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரைசதம் அடித்த பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூப் தனது ஆறு மாத மகளுக்கு மைதானத்தில் தொட்டில் கட்டிக் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
மரூப் அரைசதம் அடித்தபோது டிரஸ்ஸிங் ரூமில் இருந்த மகள் பாத்திமாவைக் தொட்டில் கட்டிக் கொண்டாட்டம் செய்தார். தனது பிரசவத்திற்குப் பிறகு இரண்டாவது போட்டியில் எங்கள் கேப்டன் அரை சதம் அடித்தார். அதை அவர் தனது மகள் பாத்திமாவுக்கு அர்ப்பணிக்கிறார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் ட்வீட் செய்தது. முன்னதாக, பிஸ்மா மரூப்பின் மகளுடன் இந்திய அணி வீராங்கனைகள் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாக பரவியது.
Skipper @Bismahmaroof giving Tribute to her 6 months baby girl by celebrating 50 That’s Why We say that Women are the most blessfull & the most Innocent creature on Earth #Womenday #WorldWomenday #PakvsAus ????????♀️❤️????♀️???? pic.twitter.com/mPySH8rcYM
— Yousaf Shah (@DruglegalDealer) March 8, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025