டி 20 தரவரிசை பட்டியலை ஐசிசி நிர்வாகம் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 4 டி- 20 ஓவர் போட்டிகளில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான 20 ஓவர் போட்டிகள் நடைபெற்று வந்தது. 4 போட்டிகளை கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தான்கைப்பற்றியது.
இந்த நிலையில் இதனை தொடர்ந்து ஐசிசி நிர்வாகம் டி 20 தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ் தான் அணி வீரர் பாபர் அசாம் 3 வது இடத்தில் இருந்து 844 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்பாக இரண்டாவது இடத்தில் ஆரோன் பின்ச் இருந்தார். முதல் இடத்தை டேவிட் மாலன் தக்க வைத்துள்ளார். இந்த பட்டியலில் விராட்கோலி, கே எல் ராகுல் ஆகிய 2 இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.
இந்த தொடரின் டி 20 – யின் முதல் போட்டியில் பாபர் அசாம் 14 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். இரண்டாவது போட்டியில் 50 பந்துகளில் 50 ரன்களும், மூன்றாவது போட்டியில் 59 பந்துகளில் அதிரடியாக விளையாடி 122 ரன்களும், நான்காவது போட்டியில் 23 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…