டி-20 உலகக்கோப்பையில் உலகசாதனை படைத்த பாபர்-ரிஸ்வான் ஜோடி.!

Default Image

டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் பாபர்-ரிஸ்வான் ஜோடி 3 முறை 100 ரன்கள் அடித்து உலகசாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப்போட்டி இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்கத்திலேயே பின் ஆலன் 4 ரன்களுக்கு அவுட் ஆனார். அதன் பின் கான்வே(21), வில்லியம்சன்(46), ரன்களும் எடுக்க கடைசியில் மிட்சேல் அதிரடியாக 53 ரன்களும் எடுக்க நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்தது. ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

153 ரன்கள் வெற்றி இலக்கை துரத்தி ஆடிய பாகிஸ்தான் அணி பாபர் அசாம்(53), மொஹம்மது ரிஸ்வான்(57), மொஹம்மது ஹாரிஸ்(30) ரன்கள் எடுக்க 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்த போட்டியில் பாபர் அசாம்-மொஹம்மது ரிஸ்வான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் குவித்து மூன்றாவது முறையாக டி-20 உலகக்கோப்பையில் 100 ரன்கள் அடித்த முதல் ஜோடி என்ற சாதனையை படைத்திருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்