நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 யில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்தில் பயணம் செய்து வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் முத்தரப்பு டி-20 தொடரில் விளையாடி வருகிறது. வங்க தேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் போட்டியில், பாகிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் இரண்டாவது போட்டி நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கான்வே(36), வில்லியம்சன்(31) மற்றும் மார்க் சாப்மேன் 32 ரன்களும் (16பந்துகளில்) எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் ராஃப் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களும், மொஹம்மது நவாஸ் மற்றும் மொஹம்மது வாசிம் தலா 2 விக்கெட்களும் எடுத்தனர்.
148 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி பாபர் அசாம் மற்றும் ஷதாப் கான் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 10 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 18.2 ஓவரில் வென்றுள்ளது. பாபர் அசாம் 62 ரன்களும், ஷதாப் கான் 34 ரன்களும் அடித்து வெற்றிக்கு உதவியாக இருந்தனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…