பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் பாபர் அசாம்! நடந்தது என்ன ?
தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரரான பாபர் அசாம் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
சென்னை : பாகிஸ்தான் நட்சத்திர பேட்ஸ்மேனான பாபர் அசாம் பேட்டிங்கில் பல சாதனைகள் படைத்தாலும், அவர் கேப்டனாக பல சறுக்கலை மட்டுமே சந்தித்துள்ளார். மேலும், தொடர்ந்து 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் மற்றும் ஆசியக் கோப்பை தொடர் என அனைத்திலும் பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
இதனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தார். இதனால், அப்போது ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி நியமிக்கப்பட்டார். மேலும், ஷான் மசூத் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார்.
இப்படி இருக்கையில் இந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு முடிவெடுத்தது. அதில், கடந்த மார்ச் மாதம் மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிக்கு பாபர் அசாமை கேப்டனாக அறிவித்தது. இது பாகிஸ்தான் ரசிகர்களிடையே கோபத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
மேலும், இதனால் பாகிஸ்தான் அணி அந்த டி20 தொடரில் எந்த ஒரு மாற்றத்தையும் சந்திக்கவில்லை. நடைபெற்ற அந்த உலகக்கோப்பைத் தொடரின் லீக் போட்டியில் அமெரிக்க அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து சூப்பர் 8 சுற்றுக்குக்கூட நுழையாமல் தொடரிலிருந்து வெளியேறியது.
இதனால், பாபர் அசாம் மீது மீண்டும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. மேலும், அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் 2-0 எனத் தோல்வியடைந்தது.
இதனால், மேலும் அந்த அணி விமர்சனங்களுக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து மீண்டும் 2-வது முறையாக பாபர் அசாம் விலகி இருப்பதாக அறிவித்துள்ளார்.