இன்றைய போட்டியில் பாகிஸ்தான் Vs பங்களாதேஷ் மோதி வருகிறது. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இப்போட்டியில் டாஸ் வென்ற அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபக்கர் ஜமான் , இமாம்-உல்-ஹக் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்துதடுமாறி விளையாடிய ஃபக்கர் ஜமான் 31 பந்தில் 13 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் பாபர் ஆசாம் களமிறங்க இமாம்-உல்-ஹக் இருவரும் கூட்டணியில் இணைந்தனர். இருவருமே தங்களது அதிரடி ஆட்டத்தை காட்டினார்.இதனால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த இருவருமே அரைசத்தை நிறைவு செய்தனர்.
இவர்களின் விக்கெட்டை பறிக்க முடியாமல் பங்களாதேஷ் அணி திணறி வந்தது. இந்நிலையில் 32 ஓவரில் பாபர் ஆசாம் 96 ரன்களுடன் வெளியேறினர்.அதில் 11 பவுண்டரி விளாசினார். நிதானமாக விளையாடி இமாம்-உல்-ஹக் சதம் விளாசினார்.
பின்னர் களமிறங்கிய முகமது ஹபீஸ் 27 , ஹரிஸ் சோஹைல் 6 , இமாத் வாசிம் 43 ரன்களுடன் விக்கெட்டை இழந்தனர்.இறுதியாக பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 315 ரன்கள் அடித்தனர்.
பங்களாதேஷ் அணியில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 5 விக்கெட்டையும் , முகமது சைபுதீன் தலா 3 விக்கெட்டையும் பறித்தனர். 316 ரன்கள் இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்க உள்ளது.
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…