27 வருட சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
உலகக்கோப்பையில் இன்றுடன் லீக் போட்டிகள் முடிய உள்ளது.நேற்று பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியுடன் கடைசி லீக் போட்டியை விளையாடியது.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டை இழந்து 315 ரன்கள் குவித்தது.அதில் இமாம்-உல்-ஹக் 100 , பாபர் ஆசாம் 96 ரன் குவித்தனர்.பிறகு இறங்கிய பங்களாதேஷ் 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 221ரன்கள் எடுத்து 94 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
நடப்பு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் மூன்று அரைசதம் ,ஒரு சதம் என 474 ரன்கள் குவித்து உள்ளார்.இந்நிலையில் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியில் அதிகபட்ச ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
1992-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜவேத் மியான்தத் 437 ரன்கள் குவித்து இருந்தார்.அதுவே உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியில் அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. தற்போது பாபர் ஆசாம் 474 ரன்கள் அடித்து 27 வருட சாதனையை முறியடித்து உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.! எதிர்பார்த்ததை விட வேகமெடுக்கும் நாசா!
February 12, 2025![Sunita Williams](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sunita-Williams.webp)
விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!
February 12, 2025![Sri Lanka vs Australia 1st ODI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sri-Lanka-vs-Australia-1st-ODI.webp)