பாபர் அசாம் செல்ஃபிஷா? வார்த்தைகளை பார்த்து பேசுங்க கம்பிர் – ஷாஹித் அப்ரிடி
பாபர் அசாம் குறித்து கருத்து தெரிவித்த கவுதம் கம்பிருக்கு, பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி பதிலளித்துள்ளார்.
பாபர் அசாமின் தற்போதைய பேட்டிங் ஃபார்ம் மற்றும் டி-20 உலகக்கோப்பையில் பாபர் தலைமையில் பாகிஸ்தான் அணி விளையாடி வரும் நிலையை பார்த்து கவுதம் கம்பிர், பாபர் அசாம் குறித்து ஒரு கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் கூறியதாவது, பாபர் தன்னைப் பற்றி யோசிக்காமல் அணியைப் பற்றி யோசித்து விளையாட வேண்டும். பாபர் மிடில் ஆர்டரில் இறங்கி விளையாட வேண்டும், ஃபக்கார் சமான் போன்ற வீரரை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்க வேண்டும். ஆட்டத்தின் போக்கு கேப்டனின் திட்டப்படி செல்லவில்லை எனில் சுயநல எண்ணத்துடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காமல் அணியின் வெற்றிக்காக யோசித்து மிடில் ஆர்டரில் பாபர் களமிறங்கவேண்டும் என்று கம்பிர் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி, வார்த்தைகளை உபயோகப்படுத்தும் போது கவனமாக இருக்கவேண்டும். வீரர்கள் சில சமயங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகும்போது, அவருக்கு வழங்கப்படும் ஆலோசனைகள் ஆக்கபூர்வமானதாகவும், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கவேண்டும் என்றும் பதில் கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்காக இதுவரை விளையாடியுள்ள வீரர்களில் பாபர் அசாம் போன்று எந்த வீரரும் இவ்வளவு வெற்றி ஆட்டங்களை கொடுத்ததில்லை. அவர் மீது மக்கள் நிறைய நம்பிக்கை வைத்துள்ளனர் என்று அப்ரிடி மேலும் தெரிவித்தார்.