பாடப் புத்தகத்தில் இடம்பெற்ற பாபர் அசாம் கவர் டிரைவ்.!
பாகிஸ்தான் அணியின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் பாபர் அசாம், அவர் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். நவீன தலைமுறையின் மிகச் சிறந்த பேட்டர்களில் பாபர் அசாமும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. குறுகிய காலத்தில் அவரது சாதனை மற்றும் திறமை மாசற்ற திறமைக்கு சான்றாகும். பாபர், பேட்டிங் ஆடுவதை மேலும் எளிதாக இருப்பது போல் ஆக்குகிறார். பாபர் அசாமின் முத்திரை ஷாட்களில் ஒன்றான கவர் டிரைவ், வெகு சில வீரர்களே இந்த கவர் டிரைவ் ஷாட்டை மிகச் சிறப்பாக செயல் படுத்த முடியும்.
இந்த கவர் டிரைவ் ஷாட் தான் பாகிஸ்தானில் 9 ஆம் வகுப்பு இயற்பியல் பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. பிரபல பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஹிராஸ் ஹசன் தனது ட்விட்டர் பக்கத்தில், பாபரின் கவர் டிரைவ் குறித்த கேள்வி இருக்கும் புகைப் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
பாபர் அசாம் தனது மட்டையால் 150J இயக்க ஆற்றலைக் கொடுத்து பந்தை கவர் டிரைவ் அடித்தார். அ) பந்தின் நிறை 120 கிராம் என்றால் பந்து எந்த வேகத்தில் எல்லைக்கு செல்லும்? b) 450 கிராம் நிறை கொண்ட கால்பந்தை இந்த வேகத்தில் நகர்த்துவதற்கு கால்பந்து வீரர் எவ்வளவு இயக்க ஆற்றலை வழங்க வேண்டும்?” என்று கேள்வி கூறுகிறது.
Babar cover drive is added in physics textbooks ???? #BabarAzam pic.twitter.com/RrBOnmVQgG
— Kaleem Khan (@Kkhaanofficial) September 14, 2022