கடும் கோபத்தில் கேள்வி எழுப்பிய அசாருதீன் ..! என்னதான் செய்கிறது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் ?

Azarrudin [file image]

ஐபிஎல் 2024 : ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான மகமது அசாருதீன் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ள மோசமான வசதிகள் தற்போது குறித்து மீண்டும் கவலை தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் உள்ள மோசமான நிலைமையை குறித்து பலரும்  பலவித கருத்துக்களை முன்பே கூறி வந்தனர். அதே போல ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரான அசாருதீனும் பல முரண்பாடான கருத்துக்களை முன்வைத்தார். அதிலும் சமீபத்திய சம்பவம் ஒன்று அவரை அதிக அளவில் கோபம் அடைய வைத்துள்ளது. அது என்னவென்றால் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மின் இணைப்பை மின்சார வாரியம் துண்டித்தது.

ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் இந்த நிலையிலும் தற்போது வரை மைதானத்தில் உள்ள மின்சாரத்திற்கான எந்த ஒரு பில்லையும் காட்டாமல் இருந்ததால்,  ஹைதராபாத் மின்சார வாரியம் மைதானத்தில் உள்ள மின்சாரத்தை துண்டித்துள்ளது. அதில் செலுத்தப்படாத நிலுவைத் தொகை, தற்போது ரூ.3 கோடியைத் தாண்டியுள்ளது. இருப்பினும், உப்பல் ஸ்டேடியம் நிர்வாகம், TSSPDCL இடையேயான பேச்சுவார்த்தை மற்றும் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மைதானத்தில் மின்சாரம் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனை விமர்சிக்கும் வகையில் முன்னாள் கேப்டனான அசாருதீன், “தற்போதைய ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் மைதானத்தில் நடக்கும் போட்டிகள் சிக்கல்களால் பாதிக்கபட்டுக் கொண்டே இருக்கிறது அதிலும் மைதானத்தில் மோசமான கழிப்பறைகள், போதுமான தண்ணீர் வசதிகள் இல்லாமல் இருப்பது மற்றும் அங்கீகாரமற்ற நுழைவு வாயில்கள்  இதெல்லாமே ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் (HCA) இன் கண்காணிப்பின் கீழ் தொடர்கின்றன

மேலும், சி.எஸ்.கே நிர்வாகம் கூட  இன்றைய போட்டிக்கான சீட்டுகளை வாங்குவதற்கு சிரமபட்டது. பணம் செலுத்தப்படாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இத்தனை பிரச்சனைகள் இந்த மைதானத்தில் இருந்து வருகிறது. இதை முன்கூட்டியே சரி செய்வோம் என்று ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் (HCA) மற்றும் APEX கவுன்சில் உறுதி அளித்தது, ஆனால் மாற்றம் இல்லை”, என்று அவரது X தளத்தில் பதிவிட்டுருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்