பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!
ஐபிஎல் 2025-36 வது போட்டியில் லக்னோ அணி ராஜஸ்தான் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. லக்னோ அணி சார்பாக ஐடன் மார்க்ராம் 66 ரன்களும், ஆயுஷ் படோனி 50 ரன்களையும் குவித்தனர். ராஜஸ்தான் அணி சார்பில் ஹசரங்கா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதலில் பேட்டிங் செய்ய வந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. பவர்பிளேயிலேயே மிட்செல் மார்ஷ் (4) மற்றும் நிக்கோலஸ் பூரன் (11) ஆகியோரின் விக்கெட்டுகளை லக்னோ அணி இழந்தது.
கேப்டன் ரிஷப் பந்த் 9 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஐடன் மார்க்ராம் 45 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆயுஷ் படோனி 34 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். ஆயுஷ் படோனி 34 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் அப்துல் சமத் நான்கு சிக்ஸர்கள் அடித்தார். சமத் 10 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் திரும்பினார்.
இதன் மூலம், லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 181 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக தொடங்கியது. ராஜஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 74 ரன்கள் குவித்தார்
ஆனால், நிதிஷ் ராணாவால் 8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வைபவ் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடையே 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் நன்றாக இருந்தது. வைபவ் மார்க்ராம் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். பின்னர், ஐ.பி.எல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில்(14) அறிமுகமான வீரர் என்ற பெருமையை ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பெற்றார்.
மைதானத்தில் களமிறங்கிய அவர், முதல் பந்தையே சிக்ஸருக்குப் பறக்கவிட்டு அபாரமாக தொடங்கினார். சூர்யவன்ஷி 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதே நேரம், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 52 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் அவேஷ் கான் பந்தில் ‘க்ளீன் பவுல்டு’ ஆனார். அவரது இன்னிங்ஸில் அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை அடித்தார்.
இறுதிவரை போராடியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வெற்றி பெறவில்லை. லக்னோ சார்பாக அவேஷ் கான் 3 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். கடைசி ஓவரில் கட்டுப்படுத்தி 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.