பிசிசிஐ கொடுத்த கிரீன் சிக்னல்… களமிறங்கும் அவேஷ் கான்.! SRH vs LSG போட்டியில் சம்பவம் காத்திருக்கு.!
அவேஷ் கானுக்கு பிசிசிஐயின் உடற்தகுதி அனுமதி கிடைத்துள்ளதால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாட வாய்ப்புள்ளது.

ஐதராபாத் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் மோசமான தோல்விக்குப் பிறகு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிக்கு பாஸிடிவான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது, காயமடைந்த லக்னோ அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சிறப்பு மையத்திலிருந்து உடற்தகுதி அனுமதி பெற்றுள்ளதாக ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ ஊடகம் தெரிவித்துள்ளது.
அவேஷ் கான் முழங்கால் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது, இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து அவேஷ் கான் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. ஆனால் இப்போது அவர் குணமடைந்துவிட்டார். இதனால், முதல் போட்டியில் விளையாட முடியாத அவேஷ், விரைவில் அணியில் இணைவார் என்று கூறப்படுகிறது.
அதன்படி, அவேஷ் கான் பிசிசிஐயின் சிறப்பு மையத்தில் இருப்பதாகவும், அவரது இறுதி உடற்தகுதி சோதனை நெற்று நடத்தப்பட்டதாகவும், அதன் பிறகு அவருக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, லக்னோ அணி முக்கிய பந்து வீச்சாளர்களின் காயங்களால் போராடி வருகிறது. மயங்க் யாதவ், ஆகாஷ் தீப், மொஹ்சின் கான் ஆகியோரும் காயமடைந்துள்ளனர். மொஹ்சின் கானுக்கு மாற்றாக ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இப்பொது, வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் காயத்திலிருந்து மீண்டு திரும்பி வர உள்ளார்.
தற்போது விசாகப்பட்டினத்தில் உள்ள லக்னோ அணி, மார்ச் 27 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிரான இரண்டாவது IPL 2025 போட்டிக்காக ஹைதராபாத் செல்ல உள்ளது. இந்நிலையில், வரும் 27-ம் தேதி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் SRH vs LSG போட்டியில் அவேஷ் கான் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெட்டாவில் நடந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ஆவேஷ் கானை எல்எஸ்ஜி ரூ.9.75 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.