177 எனும் கடின இலக்கை 19 ஓவரிலேயே எட்டி பிடித்து பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்குள் நுழைந்தது.
டி20 உலக கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. இதில் வெற்றிபெறும் அணி நியூசிலாந்து அணியுடன் இறுதி போட்டியில் மோதும். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழந்து 176 ரன்கள் எடுத்து இருந்தது. இதில் அதிகபட்சமாக ரிஸ்வான் 67 ரன்கள் எடுத்து இருந்தார். ஃபகார் சமான் 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் பாபர் அசாம் 39 ரன்கள் எடுத்திருந்தார்.
ஆஸ்திரேலியா அணி சார்பாக ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும், கம்மின்ஸ், சாம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
20 ஓவரில் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் பின்ச் முதல் பந்தில் LBW முறையில் ஆட்டம் இழந்தார். ஆனால், இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான வார்னர் நிதானமாக விளையாடி 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மிச்செல் மார்ஸ் 28 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 5 ரன்களுக்கும் மேக்ஸ்வெல் 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்த முதன்மை வீரர்கள் ஆட்டமிழந்ததால் அந்த சமயம் பாகிஸ்தான் அணிதான் வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டிருந்தது.
ஆனால், அதன் பிறகு களமிறங்கிய ஸ்டோனிஸ் மற்றும் மேத்யூ வாடே ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். அதிலும் மேத்யூ வாடே 17 பந்தில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடித்து 41 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற செய்தார். ஸ்டோனிஸ் தனது பங்கிற்கு 31 பந்துகளில் 40 ரன்கள் விளாசி இருந்தார்.
இறுதியில் 19 ஓவர் முடிவிலேயே 177 எனும் கடின இலக்கை எளிதில் எட்டி ஃபைனலுக்கு சென்றது ஆஸ்திரேலிய அணி.
பாகிஸ்தான் அணி சார்பாக சதாப் கான் 4 ஓவர் வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். சாகின் அப்ரிடி ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
வரும் ஞாயிற்று கிழமை (நவம்பர் 14) அன்று துபாயில் நடக்கும் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியும் ஆஸ்திரேலிய அணியும் பலபரிட்சை நடத்த உள்ளன.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…