AUSvsSL [File Image]
உலகக்கோப்பை 2023: இன்று நடைபெறும் போட்டியில் ஆஸ்ரேலியா அணியும் இலங்கை அணியும் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் மோதுகிறது. பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்த போட்டி இரண்டு அணிக்கும் முக்கிய போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஏனென்றால், இந்த இரண்டு அணியும் கடந்த 2 லீக் ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக, இலங்கை அணி, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் தோல்வி கண்டுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க ஆகிய அணிகளுடன் மோதியபோது தோல்வி கண்டுள்ளது.
எனவே, இன்று நடைபெறும் இந்த போட்டியில் வெற்றிபெற்று கண்டிப்பாக இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யவேண்டும் என இரண்டு அணியும் களமிறங்குகிறது. இந்நிலையில், இன்று நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
விளையாடும் வீரர்கள் :
ஆஸ்ரேலியா; மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ்(w), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ்(c), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
இலங்கை : பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ்(w/c), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, சாமிக்க கருணாரத்ன, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, லஹிரு குமார, டில்ஷான் மதுஷங்க
மேலும், இதுவரை ஆஸ்ரேலியா அணியும் இலங்கை அணியும் 11 முறை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 8 முறை ஆஸ்ரேலியா அணியும், 2 முறை இலங்கை அணியும் வெற்றிபெற்றுள்ளது. 1 போட்டி சமநிலையில் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…