#AUSvsSL : பந்துவீச்சில் பயத்தை காட்டிய ஆஸ்ரேலியா! இலங்கை வைத்த டார்கெட் இது தான்!

AUSvSL

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 14-வது லீக் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்ரேலியா, அணியும் குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும் மோதுகிறது. இந்த போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் இந்த போட்டி இந்த இரண்டு அணிக்கும் மிகவும் முக்கியமான போட்டி என்றே கூறலாம். ஏனென்றால்,  இரண்டு அணியும் கடந்த 2 லீக் ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க ஆகிய  அணிகளுடன் மோதியபோது தோல்வி கண்டுள்ளது. அதுபோல இலங்கை அணி, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் தோல்வி கண்டுள்ளது.

எனவே, எப்படியாவது இந்த போட்டியில் வெற்றிபெற்று இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு களமிறங்கி உள்ளது. இந்நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். பதும் நிஸ்ஸங்க 67 பந்துகளில் 61 ரன்களும் குசல் பெரேரா 82 பந்துகளில் 78 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்கள். அடுத்ததாக  குசல் மெண்டிஸ் 9 ரன்களும் , சதீர சமரவிக்ரம 8, சரித் அசலங்க 23, தனஞ்சய டி சில்வா 7, துனித் வெல்லலகே 2, சாமிக்க கருணாரத்ன 2, மஹீஷ் தீக்ஷன 0, லஹிரு குமார 4, தில்ஷான் மதுஷங்க 0 ரன்கள் எடுத்தனர்.

இறுதியாக 43.3 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 209 ரன்கள் எடுத்துள்ளனர். ஆஸ்ரேலியா அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் ஆடம் ஷாம்பா 4 விக்கெட்களும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்களையும், மிட்செல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர். இலங்கை அணி 209 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்ததாக 210 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்ரேலியா அணி களமிறங்குகிறது.

மேலும், இதுவரை இலங்கை அணியும்  ஆஸ்ரேலியா அணியும்  11 முறை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 2 முறை இலங்கை அணியும்  8 முறை ஆஸ்ரேலியா அணியும், வெற்றிபெற்றுள்ளது. ஒரே ஒரு போட்டி மட்டும்  சமநிலையில் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்