ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 10வது லீக் போட்டியில், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா மற்றும் தேம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிகள் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீச்சை செய்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, தென் ஆப்பிரிக்கா அணியில் முதலில் குயின்டன் டி காக், தேம்பா பாவுமா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். இதில் குயின்டன் பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுபுறம் தேம்பா பாவுமா, குயின்டனுடன் இணைந்து விளையாடி வந்த நிலையில் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதன்பிறகு ரஸ்ஸி வான் களமிறங்கி விளையாட, குயின்டன் அரைசதம் கடந்து அசத்தினார். நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த ரஸ்ஸி வான் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரையடுத்து, ஐடன் மார்க்ராம் விளையாட வந்த நிலையில் குயின்டன் 4 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் அடித்து சதம் அடித்து விளாசினார். பிறகு 109 ரன்களில் களத்தை விட்டு வெளியேறினார்.
இதனையடுத்து, ஹென்ரிச் கிளாசென் மற்றும் மார்க்ராம் இணைந்து விளையாட, மார்க்ராம் 56 ரன்கள் எடுத்து அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். பிறகு ஹென்ரிச் கிளாசென் 29 ரன்களிலும், மார்கோ ஜான்சன் 26 ரன்களிலும், டேவிட் மில்லர் 17 ரன்களிலும் தங்களது விக்கெட்டை இழந்தனர். கடைசியில் ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ் இருவர் மட்டும் களத்தில் நிற்க 50 ஓவர்கள் முடிந்தது.
இறுதியில், 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா அணி 311 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக குயின்டன் 109 ரன்களும், மார்க்ராம் 56 ரன்களும் எடுத்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஆஸ்திரேலிய அணி முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் 312 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…