[image source:x/@ESPNcricinfo]
நடப்பு ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று தொடரின் 10வது லீக் போட்டியானது நடைபெறுகிறது. அதன்படி, லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா மற்றும் தேம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது.
தென்னாபிரிக்கா அணி கடந்த அக்டோபர் 7ம் தேதி இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்பொழுது அதே வேகத்துடன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மோத உள்ளது. இலங்கைக்கு எதிரான கடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டி காக், வான் டெர் டஸ்ஸன் மற்றும் மார்க்கம் ஆகிய மூன்று பெரும் சதம் அடித்து அசத்தியிருந்தனர்.
இதுபோன்று, சென்னையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோல்வியை சந்தித்தது. இப்போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த சமயத்தில், ஆஸ்திரேலிய அணி முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என கட்டாயத்தில் உள்ளது.
இதனால் தென்னாபிகாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் அனல்பறக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இரு அணிகளும் பேட்டிங், பவுலிங் என வலுவாக இருப்பதால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில், லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா (விளையாடும் XI): குயின்டன் டி காக் (w), டெம்பா பவுமா (c), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், லுங்கி என்கிடி, ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் உள்ளனர்.
ஆஸ்திரேலியா (விளையாடும் XI): டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ்(w), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ்(c), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் உள்ளனர்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த…
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…