AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டி தொடர் மழை காரணமாக டாஸ் இன்றி கைவிடப்பட்ட நிலையில் இரண்டு அணிக்கும் தலா 1 பாய்ண்ட் வழங்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதவிருந்த நிலையில், வழக்கம் போல் டாஸ் போடப்பட்டு போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நடுவில் மழை வந்து டாஸ் கூட போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இருப்பினும் நேரங்கள் கழித்து மழை நின்றபிறகு ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி தொடங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, 20 ஓவர்கள் வைத்து போட்டி நடத்தலாம் எனவும் நடுவர்கள் திட்டமிட்டு இருந்ததாகவும் தகவல்கள் பரவி கொண்டு இருந்தது.
ஆனால், மழை நிற்காமல் பெய்து வருவதன் காரணமாக இந்த போட்டி டாஸ் இன்றி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்த காரணத்தால் இரண்டு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்படுவதாகவும் ஐசிசி தனது அதிகாரப்பூர்வ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இரண்டு அணிகளும் மோதிய இந்த போட்டி இன்று நடைபெற்றிருந்தது என்றால் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி அரையிறுதிக்கு மிக அருகில் வந்திருக்கும். இப்போது போட்டி மழையின் காரணமாக தடை செய்யப்பட்டு இரண்டு அணிகளும் 1 -1 புள்ளிகளை பெற்றுள்ளது.
இந்த பரபரப்பான போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில், இரு அணிகளும் ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொண்டதால், தென்னாப்பிரிக்கா +2.140 NRR உடன் மூன்று புள்ளிகளுடன் குழு B இல் முதலிடத்தில் உள்ளது, அதைப்போல, ஆஸ்திரேலியா அணி +0.475 உடன் மூன்று புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மேலும், இரண்டு அணிகளுக்கும் இன்னும் 1 போட்டிகள் மீதமுள்ளது. குறிப்பாக, ஆஸ்ரேலியா அணிக்கு ஆப்கானிஸ்தான் அணியுடனும், தென்னாப்பிரிக்கா அணி இங்கிலாந்து அணியுடனும் மோதவிருக்கிறது. இந்த இரண்டு அணிகளில் எந்த அணி அந்த ஒரு போட்டியில் வெற்றிபெறுகிறதோ அந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025