ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இன்று 18-ஆவது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பேட் கம்மிங்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது. சின்னசாமி ஸ்டேடியம் என்றாலே அதிக ஸ்கோர் மற்றும் சிக்ஸர் மழை பொழியும் என அனைவருக்கும் தெரியந்ததே, அதுவும் இந்த அணிகள் மோதும் போட்டி எப்படி இருக்கும் என ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியாயது. அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே இருவரும் அதிரடியான ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் பாகிஸ்தான் பவுலர்களின் பந்துவீச்சை விளாசி தள்ளினர். ஒருநாள் போட்டியை டி20 மேட்ச் போல் விளையாடிய இருவரும் அதிரடியாக சதங்களை அசத்தியுள்ளார்கள்.
அதிரடியாக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ் 108 பந்துகளில் ( 10 பவுண்டரி, 9 சிக்ஸ்) 121 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். ரன் பொழிந்து வந்த நிலையில் மற்றொரு அதிரடிய பேட்டரான கிளென் மேக்ஸ்வெல் வந்தவுடனே டக் அவுட்டில் வெளியேறினார். ஆனால், மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த வார்னர் 124 பந்துகளில் 163 ரன்கள் விளாசி ஆட்டமிழந்து வெளியேறினார். இதனிடையே, ஸ்டீவன் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுஷாக்னே என அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்களை ஆஸ்திரேலியா குவித்துள்ளது. பாகிஸ்தான் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ஷஹீன் அப்ரிடி 4, ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்த நிலையில், 368 ரன்கள் என்ற ஒரு இமாலய வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. இதனால் பாகிஸ்தான் பேட்டிங்கிலும் அதிரடி இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…