#AUSvNZ: 388 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா! இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியது நியூசிலாந்து!
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்று 27வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய ஆஸ்திரேலியா தொடக்க வீரர்களான டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் ஆகியோர் சிறப்பாகவும், அதிரடியாகவும் தொடக்கத்தை கொடுத்தனர்.
இதில், அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 67 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். மறுபக்கம் இருந்த டேவிட் வார்னர் 65 பந்துகளில் 81 ரன்கள் விளாசி இருவரும் க்ளென் பிலிப்ஸ் ஓவரில் விக்கெட்டை இழந்தனர். இதன்பின் வந்த மிட்செல் மார்ஷ் 38 ரன்கள், மேக்ஸ்வெல் 41 ரன்கள் அதிரடியாக அடித்தனர். அடுத்தடுத்த விக்கெட் இழந்தாலும், வந்த வீரர்கள் அனைவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தனர்.
#WorldCup2023: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து பவுலிங் தேர்வு!
இறுதியாக ஆஸ்திரேலிய அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணியை பொறுத்தவரையில் போல்ட் 3, க்ளென் பிலிப்ஸ் 3, சான்ட்னர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 389 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது. நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களாக டெவோன் கான்வே 28, வில் யங் 32 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்த நிலையில், களத்தில் டேரில் மிட்செல் மற்றும் ரச்சின் ரவீந்திரன் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
தற்போது நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 80 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. இதுவரை நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 8, நியூசிலாந்து 3 முறை வெற்றி பெற்றுள்ளன. இன்றைய போட்டி இரு அணிகளும் முக்கிய வாய்ந்தவை. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா. நியூசிலாந்து இமாலய இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.