AUSvIND: 5 விக்கெட்களை வீழ்த்திய சிராஜ்.. இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதன்பின் தனது முதல் இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி, 10 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் அடித்தது.
மேலும் ஆஸ்திரேலியா அணி, இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சை தாங்காமல் 294 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 55 ரன்களும், வார்னர் 48 ரன்கள் அடித்தார். பந்துவீச்சை பொறுத்தளவில் சிராஜ் தலா 5 விக்கெட்களும், ஷர்த்துல் தாக்குர் தலா 4 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்கள்.
அதன்படி இந்திய அணி, 328 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கியுள்ளது. ஏற்கனவே இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளதால், வெற்றிபெறப்போவது யார் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025