AUSvIND practise: முதல்முறையாக அரைசதம் விளாசிய பும்ரா!
ஆஸ்திரேலியாக்கு எதிரான இரண்டாம் பயிற்சி ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய பும்ரா, 57 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரி உட்பட 55 ரன்கள் எடுத்து தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, வரும் 17 ஆம் தேதி டெஸ்ட் தொடரை ஆடவுள்ளது. அதன்படி இன்று, ஆஸ்திரேலியா A அணியினருடன் இரண்டாம் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
முதலில் ப்ரித்வி ஷா – மயங்க அகர்வால் கூட்டணி களமிறங்கினார்கள். இதில் இரண்டு ரன்கள் மட்டுமே அடித்து மயங்க் அகர்வால் வெளியேற, அவரையடுத்து ஷுப்மன் கில் களமிறங்கினார். இருவரும் சிறப்பாக அடிவர, 40 ரன்கள் அடித்து ப்ரித்வி ஷா தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய ஹனுமன் விகாரி, 15 ரன்கள் மட்டுமே அடித்தார். அவரையடுத்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, மத்தியில் இருந்த ஷுப்மன் கில் 43 ரன்கள் அடித்தார்.
பின்னர் களமிறங்கிய பும்ரா, அதிரடியாக ஆடத் தொடங்கினார். அவருக்கு முஹமது சிராஜ் கைகொடுக்க, இருவரும் சிறப்பாக ஆடிவந்தனர். இதில் பும்ரா, 57 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரி உட்பட 55 ரன்கள் எடுத்து தனது முதல் அரைசதத்தை பதிவு செய்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மத்தியில் ஆடிவந்த சிராஜ், 2 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து 22 ரன்கள் அடித்தார். இறுதியாக இந்திய அணி, தனது அனைத்து விக்கெட்டையும் இழந்து 199 ரன்கள் அடித்தது.
இதனையடுத்து ஆஸ்திரேலியா A அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாரிஸ் – ஜோ பர்ன்ஸ் களமிறங்கினார்கள். 1 ஓவர் முடிவில் 6 ரன்கள் எடுத்த நிலையில், தற்பொழுது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணி, 188 ரன்கள் பின்னடைவில் உள்ளது.