[image source:x/ #ODIW]
2023ம் ஆண்டுக்கான ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 38-வது லீக் போட்டியில் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், பேட் கம்மிங்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆப்கானிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர். இதில், நட்சத்திர பேட்ஸ்மேன் குர்பாஸ் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இவரை தொடர்ந்து ரஹ்மத் ஷா 30, ஹஷ்மத்துல்லா ஷாஹித் 26 ரங்களின் அவுட்டாகி வெளியேறினர்.
“டைம்டு அவுட்” டிஸ்மிஸல் – ஆதாரங்களை பகிர்ந்து கேள்வி எழுப்பிய ஏஞ்சலோ மேத்யூஸ்!
ஒருபக்கம் அடுத்தடுத்து விக்கெட் விழுந்து வந்தாலும், மறுபக்கம் தொடக்க ஆட்டக்காரரான இப்ராஹிம் சத்ரான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன்களை உயர்த்தி வந்தார். பின்னர், விக்கெட்டுகள் இழந்தாலும், சிறப்பாக விளையாடிய இப்ராஹிம் சத்ரான் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இதனிடையே, கடைசி கட்டடத்தில் களமிறங்கிய ரஷித் கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார்.
இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரான் 143 பந்துகளில் 129 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியாவை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த நிலையில், 292 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியுள்ளது. உலகக்கோப்பை அரையிறுதி ரேஸில் இரண்டு அணிகளும் நீடிக்கும் நிலையில், இப்போட்டி மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…
சென்னை : கடந்த ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தவெக சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில்…