#AustraliavsEngland:தொடங்கியது புகழ்பெற்ற ஆஷஸ் தொடர்;இங்கிலாந்து அணி திணறல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில்,தற்போது தடுமாறி வருகிறது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் இன்று தொடங்கியுள்ளது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி,தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் ஹசீப் ஹமீது களமிறங்கிய நிலையில்,வந்த வேகத்திலேயே ரோரி பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து,ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சில் டேவிட் மாலன்,கேப்டன் ஜோ ரூட்,பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் அடுத்தடுத்து ஒற்றைப்படை எண்களிலேயே விக்கெட்டை இழக்க,மறுபறம் ஹசீப் ஹமீத்,ஒல்லி போப் நிதானமாக விளையாடி வருகின்றனர்.
அதன்படி தற்போது 19 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்த நிலையில் பேட்டிங்கில் தடுமாறி விளையாடி வருகிறது.
அணிகள்:
இங்கிலாந்து (பிளேயிங் லெவன்): ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத், டேவிட் மாலன், ஜோ ரூட்(சி), பென் ஸ்டோக்ஸ், ஒல்லி போப், ஜோஸ் பட்லர்(டபிள்யூ), கிறிஸ் வோக்ஸ், ஒல்லி ராபின்சன், மார்க் வூட், ஜாக் லீச்
ஆஸ்திரேலியா (பிளேயிங் லெவன்): டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி(டபிள்யூ), பாட் கம்மின்ஸ்(கேட்ச்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஜோஷ் ஹேசில்வுட்.