ஆஸ்திரேலிய அணி 5.1 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 20 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. இரு அணிகளும் பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி முதலில் இறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 50.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
ஆஸ்திரேலியா அணியில் கம்மின்ஸ் 5, ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டை பறித்தனர். இதைத்தொடர்ந்து, 2-ஆம் நாள் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய வந்த ஆஸ்திரேலியா அணி நேற்றைய ஆட்டத்தின் பாதியில் 104.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 425 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா அணியில் அதிகப்பட்சமாக டிராவிஸ் ஹெட் 150, லேபஸ்சேகன் 74, டேவிட் வார்னர் 94 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன், மார்க் வுட் தலா 3 , கிறிஸ் வோக்ஸ் 2 , ஜோ ரூட், ஜேக் லீச் ஆகியோர் தலா 1 விக்கெட் பறித்தனர். நேற்றைய மீதம் இருந்த நேரத்தில் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்க்ஸை தொடங்கியது.
தொடக்க வீரர்கள் ஹசீப் ஹமீத் 27, ரோரி பர்ன்ஸ் 13 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் , ஜோ ரூட் இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினர். 3-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 70 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 220 ரன் எடுத்தனர். அப்போது ஆஸ்திரேலியா அணி 58 ரன் முன்னிலையில் இருந்தது. களத்தில் டேவிட் மாலன் 80*, ஜோ ரூட் 86* ரன்களுடன் இருந்தனர்.
இந்நிலையில், இன்றை ஆட்டம் தொடங்கியதில் இருந்து இங்கிலாந்து விக்கெட்டை பறிகொடுக்க தொங்கியது. சிறப்பாக விளையாடிய டேவிட் மாலன் 82, ஜோ ரூட் 89 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க, பின்னர் அடுத்தடுத்து களம் கண்ட அனைத்து வீரர்களும் சொற்ப ரன் எடுக்க இறுதியாக இங்கிலாந்து 103 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 297 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு இலக்கு 20 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 5.1 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 20 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டி வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…