இன்றைய இரண்டாவது அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து ,ஆஸ்திரேலிய அணிகள் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய 9 லீக் போட்டியில் இரண்டு போட்டியில் மட்டும் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது. ஆஸ்திரேலிய அணி லீக் போட்டியில் இந்திய அணியுடன் தான் முதன் முறையாக தோல்வி அடைந்தது.
உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி இதுவரை விளையாடிய 11 உலகக்கோப்பை தொடரில் 7 முறை அரை இறுதி போட்டியில் விளையாடி உள்ளது. ஆஸ்திரேலிய அணி விளையாடிய 7 முறையும் வெற்றி பெற்று உள்ளது. இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி செல்லுமா ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.
இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் நியூஸிலாந்து அணியுடன் வருகின்ற 14-ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இறுதி போட்டியில் விளையாடும்.
1975: வென்றது
1987: வென்றது
1996: வென்றது
1999: வென்றது
2003: வென்றது
2007: வென்றது
2015: வென்றது
2019: ????
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…