ஆஸ்திரேலியா : வரும் செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 7-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடவுள்ளது. இந்த டி20 சுற்று பயணத்திற்கு உண்டான ஆஸ்திரேலியா அணியை தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மேலும், அதனை தொடர்ந்து வருகிற செப்டம்பர் 11 முதல், செப்டம்பர்-29 வரை இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த இரண்டு தொடருக்கான அணியை தான் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தற்போது அறிவித்துள்ளது.
கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அணியை வழி நடத்திய மிட்சல் மார்ஷ் தலைமையிலான இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த அணியாகவே இந்த 2 தொடர்களிலும் களமிறங்கவுள்ளனர்.
இரண்டு அணிகளுக்கு எதிராக ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி :
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கானொலி, டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜேக் ப்ரேசர்-மெக்குர்க், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜாம்பா.
இரண்டு அணிகளுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி :
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஜேக் ப்ரேசர்-மெக்குர்க், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஸ்டிவ் சுமித், ஆடம் ஜம்பா.
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…