ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆல்அவுட்..!

Published by
murugan

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடங்க வீரர்களாக வில் புகோவ்ஸ்கி, டேவிட் வார்னர் இருவரும் இறங்கினர்.

ஆட்டம் தொடக்கத்திலே 5 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து, மார்னஸ் லாபுசாக்னே களமிறங்க இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். நிதானமாக விளையாடி வந்த வில் புகோவ்ஸ்கி அரைசதம் அடித்து 62 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர், ஸ்மித் களம் காண மார்னஸ், ஸ்மித் இருவரும் சிறப்பான ஆட்டத்தை விளையாடி வெளிப்படுத்தினர்.

நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டை இழந்து 55 ஓவர் முடிவில் 166 ரன்கள் எடுத்தனர். களத்தில் மார்னஸ் 67*, ஸ்மித் 31* ரன்களுடன் இருந்த நிலையில் இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பாக விளையாடிய மார்னஸ் சதம் அடிக்காமல் 91 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், ஸ்மித் சதம் விளாசி 131 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து, இறங்கிய மற்ற வீரர்கள் நிலைத்து  நிற்காமல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இறுதியாக ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் ஜடேஜா 4, பும்ரா நவ்தீப் சைனி தலா 2, முகமது சிராஜ் 1 விக்கெட்டை பறித்தனர்.

Published by
murugan

Recent Posts

ஐபிஎல் வரலாற்றில் 13 வயது இளம் வீரர்..!! கிரிக்கெட் உலகை கலக்குவாரா ‘வைபவ் சூர்யவன்ஷி’?

ஐபிஎல் வரலாற்றில் 13 வயது இளம் வீரர்..!! கிரிக்கெட் உலகை கலக்குவாரா ‘வைபவ் சூர்யவன்ஷி’?

மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…

10 minutes ago

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமும்… இபிஎஸ் தாக்கல் செய்த சட்டமசோதாவும்…

சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…

51 minutes ago

எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனர் ஷஷி ரூயா காலமானார்!!

மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார்.…

1 hour ago

பொங்கல் பண்டிகை அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்!

டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…

2 hours ago

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…

2 hours ago

அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…

2 hours ago