இரு நாட்டு வீரர்களுக்கும் விருந்து அளித்த ஆஸ்திரேலிய பிரதமர்…!
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா வீரர்களுக்கு விருந்தளித்த ஆஸ்திரேலிய பிரதமர்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற்றுள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆங்கில புத்தாண்டையொட்டி இந்திய கிரிக்கெட் அணியினருக்கு விருந்தளித்து கௌரவித்தார். சிட்டி நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஜனவரி 1 ஆம் தேதி காலை இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும், டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வீரர்களும் பங்கேற்றனர். பின்னர் இரு அணி வீரர்களும் பிரதமருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.