மைதானத்தில் தகராறில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய வீரர்கள்… தடை விதித்த கிரிக்கெட் வாரியம்!
Chris Green : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கிரீன், சிட்னி கிரேடு கிரிக்கெட்டில் மைதானத்தில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதால் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் அறிமுக வீரராக விளையாடிய ஆல் ரவுண்டர் கிறிஸ் கிரீன், தற்போது அவரது சொந்த நாட்டில் பல்வேறு போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த சூழலில், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற்ற போட்டியின்போது, கிறிஸ் கிரீன் களத்தில் மற்றொரு வீரரிடம் தகராறு செய்து, சர்ச்சைக்குரிய செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
Read More – ‘புத்தகம் எழுதினாலும் அதிலும் ஃபினிஷிங் தோனி தான்’ .. – ஆகாஷ் சோப்ரா புகழாரம்
இதனால் கிறிஸ் கிரீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் எழுந்தது. இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவின் மாவட்டங்களான பென்ரித் மற்றும் நார்தர்ன் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது நடைபெற்றது. இந்த இரண்டு நாட்கள் ஆட்டத்தில் முன்னாள் அணிக்காக விளையாடி வரும் மற்றொரு வீரரான லூக் ஹோட்ஜஸ், கிரீனை அடிப்பேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், இருவரும் மாறி மாறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
Read More – NZvsAUS : வெற்றியை பெருமா நியூஸிலாந்து அணி ..? இன்னும் 258 ரன்கள் தேவை ..!
அடிப்பேன் என்ற மிரட்டலுக்கு கிரீன் எதிர்வினையாற்றினார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா வீரர் கிறிஸ் கிரீன் ஒரு போட்டியில் விளையாட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தகராறு ஏற்படுவதற்கு காரணமாக இருந்த லூக் ஹோட்ஜஸ் மூன்று போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
Read More – BANvsSL : 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்ட இலங்கை வீரர் ..! இதுதான் காரணமா ..?
முன்னதாக கடந்த டிசம்பரில் இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமான கிறிஸ் கிரீன், தற்போது பிக் பாஷ் லீக்கில் சிட்னி தண்டருக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.