ஆஸி. வீரர் கேமரான் கிரீன் ஏப்ரல் 13 வரை பந்துவீச தடை!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கேமரான் கிரீனுக்கு விதிக்கப்பட்ட தடையால் மும்பை அணிக்கு சிக்கல்.
ஆஸ்திரேலிய நட்சத்திர ஆல் ரவுண்டர் 23 வயதான கேமரான் கிரீன் ஏப்ரல் 13ம் தேதி வரை பந்துவீச அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. வீரர்கள் பணிச்சுமை மேலாண்மை அடிப்படையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, ஏப்ரல் 13ம் தேதி வரை கேமரான் கிரீன் விளையாடும் போட்டிகளில் பேட் மட்டுமே செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேமரான் கிரீன் சேர்க்கப்படும் பட்சத்தில் அவர் பேட்டிங் மட்டுமே செய்ய முடியும் என கூறப்படுகிறது.
மேலும், ஐபிஎல்-லில் மும்பை அணிக்காக விளையாடும் போது கேமரான் கிரீன் ஏப்ரல் 13ம் தேதி வரை பேட்டிங் மட்டுமே செய்ய முடியும். கேமரான் கிரீனுக்கு விதிக்கப்பட்ட தடையால் மும்பை அணிக்கு பந்துவீச முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் கேமரான் கிரீனை மும்பை அணி ரூ.17.50 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.