டி20-யிலும் ஓய்வை அறிவிக்க உள்ள டேவிட் வார்னர்..! எப்போது தெரியுமா..?

ஆஸ்திரேலிய தொடக்க வீரரான டேவிட் வார்னர் டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற உள்ளார். இவர் ஏற்கனவே ஒருநாள் (ODI) மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், விரைவில் டி20 போட்டிகளில் இருந்தும் டேவிட் வார்னர் ஓய்வு பெற உள்ளார்.

டேவிட் வார்னர் இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்காக  கடைசியாக விளையாட  உள்ளார். உலகக்கோப்பைக்கு  பிறகு சர்வதேச  டி20 போட்டியில் இருந்தும் ஓய்வு பெற உள்ளார். எனவே இந்த டி20 உலகக்கோப்பை தான் இவரது கடைசி தொடராக அமையும்.

டி20 உலகக்கோப்பைக்கு முன் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து இடையே நடைபெற உள்ள மூன்று டி20 போட்டிகளில் டேவிட் வார்னர் இடம் பெற உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள்  பட்டியலில் முன்னாள் பேட்ஸ்மேன் ஆன ஆரோன் பின்ச் 3120 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதையடுத்து அடுத்த இடத்தில்   வார்னர் தற்போது 3067  ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

CSK-வின் விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகை.? வெளியான சூப்பர் தகவல்…. 

ஆரோன் பின்ச் சாதனையை முறியடித்து முதலிடத்தில் வருவதற்கு வார்னருக்கு இன்னும் 53 ரன்கள் தேவைப்படுகிறது. வார்னர் டி20 போட்டியில் ஓய்வு பெரும் போது ஆஸ்திரேலிய அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்களை அடித்த வீரர்கள்   பட்டியலில் முதலிடத்தில் இடம் பிடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேவிட் வார்னர் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அதன்படி கடந்த 2009 முதல் 2013 வரை டெல்லி அணிக்காகவும், கடந்த 2014 முதல் 2021 வரை ஐதராபாத் அணிக்காகவும், 2022 முதல் தற்போது வரை மீண்டும் டெல்லி அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்தியாவில் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்