விரைவில் டும்..டும்… காதலியை கரம் பிடிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.! நிச்சயம் செய்தார் கேமரூன் கிரீன்…

யலிங்கப் : ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரும் முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) வீரருமான கேமரூன் கிரீன் சமீபத்தில் தனது நீண்டகால காதலி எமிலி ரெட்வுட்டை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரீன், இப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு புதிய இன்னிங்ஸைத் தொடங்குகிறார்.
அவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் கேமரூனும் எமிலியும் ஒன்றாக மிகவும் மகிழ்ச்சியாகத் தெரிகிறார்கள். இவரது நிச்சயதார்த்த செய்தி வெளியான பிறகு, கிரிக்கெட் பிரபலங்களும், ரசிகர்களும் அவர்களுக்கு ஏராளமான வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கேமரூன் கிரீன் மற்றும் எமிலியின் காதல் கதை நீண்ட காலமாக வதந்திகளில் இருந்து வந்த நிலையில், இன்று அது உண்மை என இருவரும் நிரூபித்துள்ளனர். இருவரும் அடிக்கடி தங்கள் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள்.
View this post on Instagram
இதற்கிடையில், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிரீன், முதுகு காயம் காரணமாக 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் அவருக்கு கீழ் முதுகில் ஏற்பட்ட அழுத்த எலும்பு முறிவுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, அதிலிருந்து அவர் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு எடுத்து வருகிறார். இந்தக் காயம் காரணமாக, கிரீன் 2024 ஆம் ஆண்டு பார்டர்-கவாஸ்கர் டிராபியிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கேமரூன் கிரீனனின் காதலி யார்?
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் காதலியான எமிலி ஒரு ஊட்டச்சத்து நிபுணர். கர்டின் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை முடித்த எமிலி, 2021 இல் கர்டின் பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இருப்பினும், 2016 ஆம் ஆண்டில் அவருக்கு செலியாக் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அவர் பசையம் இல்லாத உணவைப் பின்பற்றுகிறார்.