ICC T20 World Cup 2024 : ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ் ?
ICC : இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை போட்டியானது வருகிற ஜூன் மாதம் 1-ம் தேதி தொடங்கி ஜூன்-30ம் தேதி நிறைவடைய உள்ளது. இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடனே டி20 உலகக்கோப்பை தொடங்கி விடும். டி20 உலகக்கோப்பைக்கு ஒரு பயிற்சி ஆட்டமாகத்தான் இந்த ஐபிஎல் தொடரை அனைத்து அணி வீரர்களும் விளையாடுவார்கள். அதனால் நடைபெற போகும் இந்த டி20 போட்டியில் இடம் பிடிக்க இந்த ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வீரரும் தனது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்துவார்கள்.
Read More :- ஆண்டுக்கு இரு முறை ஐபிஎல் போட்டிகள்.! வெளியான தகவலால் ரசிகர்கள் குஷி
தற்போது, ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக வருகிற டி20 உலகக்கோப்பை தொடரில் மிட்செல் மார்ஷ் செயல்பட உள்ளார் என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளரான மெக்டொனால்ட் கூறி உள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் உலகக்கோப்பையில் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வென்ற பிறகு இனி டி20I ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டன் மிட்செல் மார்ஷ் என்று அறிவித்திருந்தனர்.
கடந்த வருடம் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவுடனான டி20I தொடரை 3-0 என்ற கணக்கிலும், அந்த ஆண்டின் தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20I தொடரை 2-1 கணக்கிலும் அதன் பிறகு தற்போது நிறைவடைந்த நியூஸிலாந்து உடனான டி20I தொடரை 3-0 என்ற கணக்கிலும் வென்றுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்காவுடனான டி20I தொடரில் மிட்செல் மார்ஷ் தொடரின் சிறந்த வீரர் (Player of the Series) என்ற விருதையும் வாங்கி இருந்தார்.
Read More – IPL 2024 : சிஎஸ்கே போட்டிக்கான ஐபிஎல் டிக்கெட் இனி ஆன்லைனில் மட்டும் தான் ..!
மிட்செல் மார்ஷ் 54 டி20 போட்டிகளில் விளையாடி 1432 ரன்கள் குவித்து (9 அரை சதங்கள் அடங்கும்) 22.76 சராசரியுடன், 17 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார். இவை எல்லாம் கணக்கில் கொண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக டி20 உலகக்கோப்பை கேப்டனாக மிட்செல் மார்ஷ் தேர்வு செய்யவுள்ளார் என பயிற்சியாளரான மெக்டொனால்ட் கூறி இருக்கிறார் என தகவல்கள் தெரிகிறது. மேலும், அதிகாரப்ப்பூர்வ தகவல் ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பிறகு வெளிவரலாம் என கிரிக்கெட் வட்டாரங்களில் தெரிகிறது.