AUSvsBAN: டாஸ் வென்றது ஆஸ்திரேலியா.! பேட்டிங் செய்ய தயாராகும் பங்களாதேஷ்.!

AUSvsBAN

AUSvsBAN: நடப்பு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தமாக 45 லீக் போட்டிகள், 2 அரையிறுதி போட்டிகள் மற்றும் ஒரு இறுதி போட்டியானது நடைபெறும். இதில் 45 லீக் போட்டிகளில், 42 லீக் போட்டிகள் முடிந்துள்ளது.

இந்த தொடரில் இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் இதுவரை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்துள்ளன.

இந்நிலையில் இன்று 43 வது லீக் போட்டி, புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் அரையிறுதிக்குத் தகுதிப்பெற்ற ஆஸ்திரேலியா, தொடரில் இருந்து வெளியேறிய பங்களாதேஷ் அணியுடன் நேருக்கு நேர் மோதுகிறது.

ஆஸ்திரேலியாவும் பங்களாதேஷ் அணியும் இதுவரை 21 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளன. இதில் 19 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷ் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அதில் ஒரு போட்டியில் எந்த முடிவும் இல்லை.

எனவே இன்று நடைபெறுகிற போட்டியில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷை வீழ்த்த வாய்ப்பு உள்ளது. தற்போது டாஸ் போடப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

பங்களாதேஷ்

தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ(C), மஹ்முதுல்லா, முஷ்பிகுர் ரஹீம்(W), தவ்ஹித் ஹிரிடோய், மெஹிதி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், நசும் அகமது, தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்

ஆஸ்திரேலியா

டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ்(W), மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், பாட் கம்மின்ஸ்(C), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்