இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பையின் 5 வது போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில்நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியாவில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மிட்செல் மார்ஷ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மிட்செல் மார்ஷ் 3-வது ஓவரில் பும்ரா வீசிய பந்தில் விராட் கோலி-யிடம் கேட்டை கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஸ்மித் களமிறக்க வார்னர் ஸ்மித் இருவரும் கை கோர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரின் கூட்டணியில் 69 ரன்கள் சேர்க்கப்பட்டது.
சிறப்பாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 41 எடுத்து விக்கெட் இழந்தார். அடுத்து மார்னஸ் லாபுசாக்னே களம் கண்டார். நிதானமாக விளையாடிய ஸ்மித் அரைசதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஜடேஜா ஸ்மித்தை போல்ட் செய்தார். இதனால் ஸ்மித் 46 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் இந்திய அணி பந்து வீச்சாளர்களிடம் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
மத்தியில் களம் கண்ட மிட்செல் ஸ்டார்க் மட்டும் 28 ரன்கள் எடுக்க இறுதியாக ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 199 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 46 ரன்களும், வார்னர் 41 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் ஜடேஜா மூன்று விக்கெட்டும் , குல்தீப் , பும்ரா தலா இரண்டு விக்கெட்டும், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, அஸ்வின் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினர்.
200ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது. இப்போட்டியில் சூழல் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. காரணம் ஜடேஜா, குல்தீப் இருவரும் 5 விக்கெட்டை பறித்தனர். மற்ற 4 பந்து வீச்சாளர்கள் சேர்ந்து 5 விக்கெட்டை தான் பறித்துள்ளனர்.
இந்தியா பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் , ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா.
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…