NZvsAUS : தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா ..! ஆறுதல் வெற்றியை கூட பெறாத நியூஸிலாந்து ..!
NZvsAUS : ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த சுற்றுப் பயணத்தொடர் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த தொடரில் 3-டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளும் நடைபெற்றது. நடந்து முடிந்த இந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பிறகு நடைபெற்ற 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 1-0 என கைப்பற்றி இருந்தது.
இன்று முடிவடைந்துள்ள இந்த கடைசி டெஸ்ட் போட்டியானது மார்ச்-8 ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மிகவும் நிதானமாக விளையாட தொடங்கினார்கள். நிதானத்துடன் விளையாடினாலும் ரன்களை எடுக்க தவறியதால் நியூஸிலாந்து அணி மறு பக்கம் விக்கெட்டுகளையும் இழந்து திணறியது.
Read More :- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் கெத்து காட்டும் இந்திய கிரிக்கெட் அணி
இதனால், முதல் இன்னிங்சில் நியூஸிலாந்து அணி 45.2 ஓவருக்கு 10 விக்கெட்டையும் இழந்து 162 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா அணியில் ஹேசில்வுட் மற்றும் கம்மின்ஸ் தலா 4 டிக்கெட்டுகளை எடுத்தனர். அதன் பிறகு ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸ்க்கு களமிறங்கியது. ஆஸ்திரேலியா அணியின் லபுஷேன் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் விளையாடிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டையும் இழந்து 68 ஓவருக்கு 256 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம், ஆஸ்திரேலியா அணி 94 ரன்கள் முன்னிலையில் இருந்தது. அதன் பிறகு 2-வது இன்னிங்ஸ்க்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி அதிக ரன்களை ஆஸ்திரேலியா அணிக்கு நிர்ணயிக்க வேண்டும் என்ற முனைப்பில் விளையாடியது. இதனால், விக்கெட்டுகள் விழுந்தாலும் களமிறங்கிய தொடக்க பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் பூர்த்தி செய்தனர். இறுதியில், நியூஸிலாந்து அணி 108.2 ஓவருக்கு 10 விக்கெட்டையும் இழந்து 372 ரன்கள் எடுத்தது.
Read More – IPL 2024 : காயம் காரணமாக வெளியேறினார் பத்திரனா ..! சிஎஸ்கே அணிக்கு தொடரும் துன்பம்..!
இதனால், ஆஸ்திரேலியா அணிக்கு 278 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. நியூஸிலாந்து அணியின் அபாரமான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மானைகளை திணற வைத்தனர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 80-5 என தோல்வியின் விழும்பில் இருந்தது. அதன் பிறகு களமிறங்கிய மிட்செல் மார்ஷும், அலெக்ஸ் கேரியும் பொறுமையுடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி கொண்டே இருந்தனர். இருவரது சிறப்பான விளையாட்டால் அந்த அணி தோல்வியிலிருந்து மீண்டது.
Read More – IPL 2024 : ஐபிஎல் தொடரை நேசிப்பதற்கு இதுதான் காரணம் ..! மனம் திறந்த விராட் கோலி ..!
இறுதியில், ஆஸ்திரேலியா அணி 65 ஓவருக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்களை எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அலெக்ஸ் கேரி 98* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றிகு வழிவகுத்தார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி 2-0 என்று டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி உள்ளது. இந்த NZvsAUS சுற்று பயணத்தில் ஆறுதல் வெற்றியை கூட நியூஸிலாந்து அணி பெறவில்லை என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.